ஐபிஎல் அணிகள் 4 வீரர்களை தக்க வைக்கலாம்

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படுகிறது. இந்நிலையில் வீரர்களுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் 3 இந்திய வீரர்கள் அல்லது 2 வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம்.

மெகா ஏலத்தின்போது ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.90 கோடி வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும். 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள நினைத்தால் மொத்த தொகையில் ரூ.35-40 கோடி வரை அதற்காகவே செலவிட வேண்டிய சூழல் ஏற்படலாம். மீதமுள்ள தொகையில் தான் மற்ற வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும்.

Related Stories:

More