×

கணவன் விட்டுச் சென்று 14 ஆண்டுகள் ஆகிவிட்டன... மகளுக்கு தனது பெயரை இனிஷியல் ஆக அனுமதி கோரி தாய் மனு!!

மதுரை : எனது பெயரை மகளுக்கு இனிஷியலாக போட்டுக் கொள்ள அனுமதிக்குமாறு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த போதும்பொன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது மகள் காவியா அரசு உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருவதாக தெரிவித்துள்ளார். கணவன் கைவிட்டு சென்றதால் கடந்த 14 ஆண்டுகளாக தந்தையின் பராமரிப்பில் வசித்து வருவதாக கூறியுள்ளார்.

தனது மகளை பள்ளியில் சேர்த்த போதும் ஆதார் கார்டிலும் எனது பெயரின் முதல் எழுத்தே காவியாவுக்கு இன்ஷியல் ஆக்க தரப்பட்டுள்ளது. தந்தையின் பெயரை காவியா இன்ஷியலாக பயன்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எனது பெயரின் முதல் எழுத்தை இன்ஷியல் ஆக பயன்படுத்த பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டதாக தெரிவித்துள்ள மனுதாரர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் போதும் இந்த பிரச்சனை எழக்கூடும் என்பதால் மகளுக்கு எனது பெயரின் முதல் எழுத்தை இன்ஷியல் ஆக பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், ராமமூர்த்தி அமர்வு, இது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Tags : Manu , இனிஷியல்
× RELATED காங்கிரஸ் போட்டி வேட்பாளர் மனு டிஸ்மிஸ்