நாள்தோறும் ஒவ்வொரு அமைச்சர் மீதும் கற்பனையான புகார்களை கூறி வருகிறார் அண்ணாமலை : அமைச்சர் கயல்விழி சாடல்!

சென்னை : நாள்தோறும் ஒவ்வொரு அமைச்சர் மீதும் கற்பனையான புகார்களை கூறி திமுக ஆட்சிக்கும் முதல்வருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுவதாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.ஆதி திராவிடர் நலத்துறை மாணவ, மாணவியர் விடுதியில் பணியாற்றும் சமையல்காரர்களை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வருவதாக ட்விட்டர் வாயிலாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மீது அண்ணாமலை குற்றம் கூறி இருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் கயல்விழி,  சமையல் பணியாட்களை அழைத்து வந்து எனது வீட்டில் வேலை செய்யும் அளவிற்கு பெரிய அளவிலான கூட்டம் எதுவும் எமது வீட்டில் இல்லை என்று தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு அவரது பாணியிலேயே ட்விட்டரில் பதில் அளித்து உள்ள கயல்விழி செல்வராஜ்,திரு.அண்ணாமலை அவர்கள்,எங்கள் வீட்டு சமையலுக்கு நான் எங்கள் துறை விடுதியின் சமையலற்களை பயன்படுத்தி வருவதாக அபாண்டமாக பொய் சொல்லியுள்ளார்.எங்கள் வீட்டு சமையலுக்கு இரு சமையலற்களை சம்பளத்திற்கு பணியில் அமர்த்தியுள்ளேன்.அவர் வெளியிட்டிருக்கும் பட்டியலுக்கும் எனக்கும்  சம்பந்தம் இல்லை, என்றார்.

Related Stories: