×

பூந்தமல்லி ஒன்றியத்தில் 500 மரக்கன்றுகள் நடும் விழா: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம் படூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.பாலசுப்பிரமணியம், எஸ்.அமிழ்தமன்னன், ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ஜெயந்தி முரளி அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு செடி விதைகள், பனை மர விதைகள் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், கால்நடை தீவனம் பயிர் வளர்த்தல், நீர்வரத்து கால்வாய் அமைத்தல், கழிவுநீர் குட்டை அமைத்தல், சிமென்ட் கான்கிரிட் தடுப்பணை அமைத்தல், கிணறு அமைத்தல் ஆகிய பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, குத்தம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டு கணினி வகுப்பறையை பார்வையிட்டு தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக கருணாகரச்சேரி ஊராட்சி அமுதூர்மேடு கிராமத்தில் ஊராட்சி தலைவர் பத்மாவதி கைலாசம் முன்னிலையில், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். முடிவில் ஊராட்சி துணைத்தலைவர் ஜெ.விக்னேஷ் நன்றி கூறினார். இதில் திமுக நிர்வாகிகள் கு.ச.கதிரவன், பா.கந்தன், வழக்கறிஞர் சின்னா, வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Poonamallee ,Union ,A. Krishnasamy ,MLA , Poonamallee, Union, Saplings, A. Krishnasamy MLA
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு...