பெருமாள் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில் மாரி சின்னம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே,  சுமார் 150 ஆண்டு பழமையான ஸ்ரீவேணுநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு, தினமும் 3 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.  கோயிலுக்கு வரும் பக்தர்கள், அங்கு சுவரில் பொருத்தியுள்ள உண்டியலில், காணிக்கை செலுத்திவிட்டு செல்வது வழக்கம். இக்கோயிலில், கடம்பாடி கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மனைவி ஜெயலட்சுமி, தினமும் கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கோயிலை சுத்தம் செய்வதற்காக ஜெயலட்சுமி சென்றார். அப்போது, கோயில் முன் சில்லறைகள் சிதறி கிடந்தன. கோயில் சுவரில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையறிந்ததும், கிராம மக்கள் அங்கு திரண்டனர். புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

More