ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு துணை தலைவர் தேர்தல் ரத்து

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு துணைத்தலைவர் பதவிக்கு ேநற்று மதியம் 3 மணிக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்து ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் தபால் வழங்கப்பட்டது. ஆனால் காலதாமதமாக தபால் வழங்கியதாக கூறி அதிமுகவைச் சேர்ந்த 7 கவுன்சிலர்கள் தபால் வாங்க மறுத்துவிட்டனர்.  

துணை தலைவர் தேர்தலில் அதிமுகவினர் பங்கேற்காத நிலையில், திமுக, காங்கிரஸ், பாமகவைச் சேர்ந்த 9 பேர் தபால் பெற்றுக்கொண்டு துணைத் தலைவர் தேர்தலில் பங்கேற்ற வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்திருந்தனர். வெற்றிக்கு தேவையான உறுப்பினர்கள் பலம் இருந்ததால் திமுக முன் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி என்று எதிர்பார்க்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக தேர்தல் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் சார்பில் அறிக்கை வெளிடப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெயர் பலகையில் ஒட்டப்பட்டது.

Related Stories:

More