உட்கட்சி பூசலால் தவிக்கும் பஞ்சாப் காங்கிரசுக்கு புதிய பொறுப்பாளர்: ஹரிஸ் ராவத் நீக்கம்

புதுடெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தில் இருந்து வருகிறது. இம்மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கின் கடும் எதிர்ப்பையும் மீறி, இம்மாநில காங்கிரஸ் தலைவராக நவஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார். மேலும், கட்சி  தன்னை அவமானப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டி முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் பதவி விலகிய பிறகு, சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவை அனைத்திலும்  இம்மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான ஹரிஸ் ராவத் முக்கிய பங்கு வகித்தார்.

இந்நிலையில், தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், பஞ்சாப் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு ராவத் சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுள்ள சோனியா, ராவத்துக்கு பதிலாக பஞ்சாப் மேலிட பொறுப்பாளர் பதவிக்கு ஹரிஸ் சவுத்ரியை நேற்று நியமித்துள்ளார். இவர் பஞ்சாப் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச மேலிட பொறுப்பாளர் பதவியை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More