ஆமிர் கான் நடித்த பட்டாசு விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு

சென்னை: கார்களுக்கான டயர் தயாரிக்கும் ஒரு நிறுவனம், சமீபத்தில் நடிகர் ஆமிர் கான் நடித்த விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இதில் ஆமிர் கான், ‘சாலைகள் பட்டாசு வெடிப்பதற்காக அல்ல. சாலைகள் கார்களுக்காக’ என்ற வசனத்தை பேசியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலபேர் ஆமிர் கானுக்கும், அந்த டயர் நிறுவனத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த நிறுவனத்துக்கு கர்நாடக பாஜ எம்பி அனந்த்குமார் ஹெக்டே எழுதியுள்ள கடிதத்தில், ‘பொதுமக்களின்  பிரச்னைகள் மீதான ஆமிரின்அக்கறைக்கு பாராட்டுகள். ஆனால், இதுபோல்  சாலைகளில் பொதுமக்கள் சந்திக்கும் இன்னொரு பிரச்னையையும் நீங்கள்  சுட்டிக்காட்ட வேண்டும். அது வெள்ளிக்கிழமை  மற்றும் இதர விழா நாட்களில் தொழுகையின் பெயரில் முஸ்லிம்களால் சாலைகள்  மறிக்கப்படுவது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: