தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

சென்னை:  தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த மாதம் 18ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.  இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திடீரென டெல்லி சென்றார். டெல்லியில் இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த அமைச்சர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாவை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இந்நிலையில் தமிழக ஆளுநர் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories:

More
>