புனித தோமையார் மலை ஒன்றிய தலைவராக திமுக பெண் வேட்பாளர் தேர்வு

தாம்பரம்: புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சிகளின் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.இதில், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவராக,  திமுகவை சேர்ந்த சங்கீதா பாரதிராஜா, பிரசாத் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில் திமுகவை சேர்ந்த விநாயகமூர்த்தி, மதுரபாக்கம் ஊராட்சியில் புருேஷாத்தமன், அகரம் தென் ஊராட்சியில் அரவிந்தன், திருவஞ்சேரி ஊராட்சியில் ருக்மணி ஆகியோர் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதேபோல், மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற திமுக தலைவராக ஜி.கே.ரவி மற்றும் 12 வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில் துணைத் தலைவர் தேர்தல் நேற்று ஊராட்சி அலுவலதில் தேர்தல் அதிகாரி சவுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது. இதில் 12வது வார்டு உறுப்பினரும் கோகுலம் நகர திமுக கிளை செயலாளருமான எம்.பி.பிரகாஷ் துணை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: