நாட்டில் 21% பேர் மட்டுமே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் - காங்கிரஸ் விமர்சனம்

நாடு முழுவதும் 100கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதை ஒன்றிய அரசு கொண்டாடி வரும் நிலையில் இதுவரை 22% மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் தொடங்கி தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் 100கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்திருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

எனினும் 21%க்கு மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் 51% மக்கள் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 18வயதிற்கு கீழே உள்ளோருக்கு தடுப்பூசி எப்போது கிடைக்கும் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அதே நேரத்தில் 18வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற இலக்கை மோடி அரசு கைவிட்டுவிட்டதாக மார்க்சிஸ்ட் கட்சியின் புது செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாததால் தொற்று பரவும் ஆபத்து அதிகம் என்றும் யெச்சூரி எச்சரித்துள்ளார்.                           

Related Stories:

More
>