ஐபிஎல்லில் புதிதாக சேர்க்கப்படும் 2 அணிகளில் ஒன்றை வாங்க முயற்சிக்கும் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே..!

டெல்லி: ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக சேர்க்கப்படும் 2 அணிகளில் ஒன்றை கைப்பற்றும் போட்டியில் பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி இறங்கியுள்ளது..இந்தியாவில் பிரபலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் தற்போது சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப், ஐதராபாத், டெல்லி ஆகிய 8 அணிகள் உள்ளன.இந்த நிலையில் அடுத்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகளை சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதற்கான டெஸ்டரும் ஏற்கனவே விடப்பட்டியிருந்தது.

இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு புதிய அணிகளை வாங்க பல பெரிய நிறுவனங்கள் போட்டியில் கலந்துக்கொண்டு உள்ளன. ஆனால் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த போட்டி வரிசையில், மிகவும் பிரபலமான பாலிவுட் ஜோடியும் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் முன்னணி கால்பந்து கிளப்பான மேன்செஸ்டர் யுனைட்டெட் கிளப் நடத்தி வரும் தி க்ளேசர் ஃபேமிலி குழுமம் புதிய அணியை ஏலம் எடுப்பதற்காக விண்ணப்பம் பெற்றுள்ளது. அந்த குழுமத்தினருடன் இணைந்து ரன்வீர் சிங் (Ranveer Singh) மற்றும் தீபிகா படுகோனே (Deepika Padukone) ஜோடி ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Related Stories:

More