ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!: 9 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது திமுக..!!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்:

* காஞ்சிபுரத்தில் மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றியதால் திமுக வேட்பாளர் மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

* செங்கல்பட்டை பொறுத்தவரை 16 உறுப்பினர்களில் 15 இடங்களில் திமுகவும், 1 இடத்தை அதிமுகவும் கைப்பற்றிய நிலையில், திமுக வேட்பாளர் செம்பருத்தி மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* விழுப்புரத்தில் 28 உறுப்பினர்களில் திமுக கூட்டணி 27 இடங்களையும், அதிமுக 1 இடத்தையும் கைப்பற்றியது. இதனால் திமுக வேட்பாளர் ஜெயசந்திரன் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

* கள்ளக்குறிச்சியில் 19 இடங்களையும் திமுக கைப்பற்றியதால் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி பெருமாள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* வேலூரிலும் 14 இடங்களில் அனைத்து இடங்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. இதனால் திமுக வேட்பாளர் மு.பாபு மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

* திருப்பத்தூரை பொறுத்தவரை 13 இடங்களையும் திமுகவே கைப்பற்றியதால் அக்கட்சியை சேர்ந்த சூர்யகுமார் போட்டியின்றி தேர்வானார்.

* ராணிப்பேட்டையிலும் மொத்தம் உள்ள 13 இடங்களை திமுக கைப்பற்றியதால் ஜெயந்தி மூர்த்தி போட்டியின்றி தேர்வானார்.

* தென்காசியில் 14 இடங்களில் திமுக 10 இடங்களையும், கூட்டணி கட்சிகள் 4 இடங்களையும் கைப்பற்றின. இதனால் திமுக வேட்பாளர் தமிழ்செல்வி மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

* திருநெல்வேலியில் மொத்தம் உள்ள 12 இடங்களில் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியதால் திமுக வெப்பாளர் ஜெகதீஷ் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories:

More
>