×

டி.20 உலக கோப்பை தொடர்.! சூப்பர் 12 சுற்று போட்டிகள் நாளை தொடக்கம்: அனல்பறக்குமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

துபாய்: 7வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாட்டில் நடந்து வருகிறது. முதலில் தகுதி சுற்று போட்டிகள் நடந்தன. 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. இதில் பி பிரிவு போட்டிகள் நேற்றுடன் முடிந்தன. இந்த பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த ஸ்காட்லாந்து, வங்கதேச அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றன. ஏ பிரிவில் இன்றுடன் தகுதி சுற்று போட்டிகள் முடிகின்றன. நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள 8 அணிகள் நேரடியாக இந்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. மீதமுள்ள 4 அணிகள் தகுதிச்சுற்றில் இருந்து தேர்வாகிறது.

12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் இருபிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் தென்ஆப்ரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் இன்று தகுதி சுற்றின் முடிவை பொறுத்து ஏ பிரிவில் இருந்து ஒரு அணி இடம்பெறும். குரூப் 2 பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து மற்றும் தகுதி சுற்றில் ஏ பிரிவில் 2ம் இடம்பிடிக்கும் அணி இடம்பெறும்.

சூப்பர் 12 சுற்றில் நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அபுதாபியில் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு துபாயில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி நாளை மறுநாள் இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெற உள்ளது. நாளை முதல் பிரதான சுற்று தொடங்க உள்ளதால் டி.20 உலக கோப்பை தொடரில் அனல்பறக்கும் என்றும் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : T20 World Cup Series , T20 World Cup Series! Super 12 round matches start tomorrow: Will it heat up? Expect fans
× RELATED 2024ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை...