ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 12 சுற்றில் ஸ்காட்லாந்து: இந்திய அணி உள்ள பிரிவில் இடம்பிடித்தது.!

அல் அமீரகம்: உலக கோப்பை டி.20 தொடர் தகுதி சுற்றில் பி பிரிவில் நேற்று இரவு நடந்த போட்டியில் ஓமன்-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஓமன் 20 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக அகிப் இலியாஸ் 37, கேப்டன் மக்ஸூத் 34 ரன் அடித்தனர். . ஸ்காட்லாந்து தரப்பில் ஜோஷ் டேவி 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் 123 ரன் இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து 17 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கைல் கோட்சர் 28 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 41 ரன் விளாசினார். ஸ்காட்லாந்தின் ஜோஷ் டேவி ஆட்டநாயகன் விருது பெற்றார். தங்கள் பிரிவில் உள்ள வங்கதேசம், பப்புவா, ஓமன் என 3 அணிகளையும் வீழ்த்திய ஸ்காட்லாந்து ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.  

இந்த பிரிவில் முன்னதாக நேற்று மாலை நடந்த போட்டியில் வங்கதேசம், பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் குவித்தது. பின்னர் ஆடிய பப்புவா 19.3 ஓவரில் 97 ரன்னுக்கு சுருண்டது. இதனால் வங்கதேசம் 84 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 3 போட்டியில் 2 வெற்றியுடன் பி பிரிவில் 2வது இடம் பிடித்த வங்கதேசம் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. பப்புவா 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த பிரிவில் இருந்து ஸ்காட்லாந்து சூப்பர் 12 சுற்றில், இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் 2லும், வங்கதேசம் குரூப் 1லும் இடம்பெற்றுள்ளது.

Related Stories:

More
>