ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவராக சங்கீதா பாரி தேர்வு

திருப்பத்தூர்: ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவராக சங்கீதா பாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்க திமுகவினரிடையே போட்டி நடந்த நிலையில் சங்கீதா பாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 18 கவுன்சிலர்களில் திமுக உறுப்பினர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்த நிலையில் எஞ்சிய 12 வாக்குகளை பெற்று சங்கீதா வெற்றி பெற்றுள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஒன்றிய குழு தலைவர் தேர்வு நடைபெற்று வருகிறது. 4 அதிமுக, 2 பாமக, ஒரு சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் திமுகவை சேர்ந்த சங்கீதா பாரி வெற்றி பெற்றார். சங்கீதா பாரியை ஆதரித்த 12 பேரில் 5 பேர் மட்டுமே திமுக உறுப்பினர்கள்.

Related Stories:

More
>