×

டிவிட்டரில் சர்ச்சை கருத்து பாஜ பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை:   சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், பாஜவை சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.  அதன் அடிப்படையில் அக்டோபர் 16ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் மூன்றாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து புகார்தாரர் கோபிநாத் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இந்த மனு மாஜிஸ்திரேட் தாவூத் அம்மா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்யாணராமன் உள்நோக்கத்தோடு மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும், மத ரீதியாகவும், மத நம்பிக்கை தொடர்பாகவும் பேசக் கூடாதென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை அவர் தொடர்ந்து மீறி வருவதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சமூகத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் புகார்தாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, கல்யாணராமனின் ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Twitter ,BJP , Controversial comment on Twitter Of the BJP personality Bail petition dismissed
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு