தொழிற்பயிற்சி பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை : மதுரையில் அமைச்சர்கள் பேச்சு

மதுரை:  மதுரை புதூர் ஐடிஐ வளாகத்தில் உள்ள திறன்மேம்பாட்டு மையத்தை பார்வையிட்ட அமைச்சர்  சி.வி.கணேசன் மாணவர்களிடம் பேசும்போது, ‘‘10 ஆண்டு அதிமுக ஆட்சியில் ஐடிஐக்களை கவனிப்பின்றி விட்டு விட்டனர். தமிழகத்தின் 90 ஐடிஐக்களில், 25 ஆயிரம் மாணவர்களே பயில்கின்றனர். ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும்’’ என்றார்.

 அமைச்சர் பி. மூர்த்தி பேசும்போது, ‘‘ஐடிஐயில் உள்ள எந்தப் பாடப்பிரிவில் பயின்றாலும் வேலைவாய்ப்பு என்பது உறுதி’’ என்றார். அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ‘‘தொழிற்பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு கூடுதலாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories:

More
>