திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் சிதம்பர சுவாமிகள் மடத்தில் அன்னாபிஷேகம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உள்ள சிதம்பர சுவாமிகள் மடத்தில் அன்னாபிஷேகம் நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலை நிர்மாணித்த சிதம்பர சுவாமிகள் திருமடத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திர நாளில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி, நேற்று மாலை 4.30 மணிக்கு சிதம்பர சுவாமிகள் சன்னதியில் உள்ள சிவலிங்கத்தின் மீது அன்னம், காய்கறிகள், பழம் ஆகியவற்றால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இதில்,  ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அன்னாபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உணவு சமைத்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

Related Stories: