திருமண ஆசை கூறி பிளஸ் 2 மாணவி பலாத்காரம் போக்சோவில் சிறுவன் கைது

பொன்னேரி: மீஞ்சூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவியை திருமண ஆசை காட்டி ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஓம்சக்தி நகரில் வசித்து வருபவர் ரமேஷ் (40). இவரது மகள் ராணி(17) (பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்கு உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து விட்டு மீஞ்சூர் குப்புசாமி தெருவில் உள்ள பாட்டி சரோஜாவுடன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி மீஞ்சூர் பஜாருக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை உறவினர்கள், நண்பர்கள் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  இதுகுறித்து சிறுமியின்  தந்தை ரமேஷ் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.  

இதனை தொடர்ந்து  பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகிதா அண்ண கிறிஸ்டி விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற சிறுவன்(17) அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி திருமண ஆசை காட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள மூல படவா என்ற கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு கடந்தி சென்றது தெரிய வந்தது. உடனே, ஆந்திரா விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு பொன்னேரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது,  சிறுமியை கடத்திய லோகேஷ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு  செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் சிறுவனை செங்கல்பட்டு சிறார் சிர்திருத்தப்பள்ளிக்கும் சிறுமியை திருவள்ளூர் பெண்கள் காப்பகத்துக்கும் அனுப்பினர்.

Related Stories:

More