×

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதம் ஜார்கண்ட் முதல்வரிடம் வழங்கினார் திருச்சி சிவா

புதுடெல்லி: தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை சட்டம்- 2022 என்ற புதிய சட்ட  முன்வடிவை தமிழக அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. அதன் நகலை  இணைத்து 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ‘ஒன்றிய அரசின்  நீட் அறிமுகம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசுகளால்  நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ கல்வி நிறுவனங்களின் சேர்க்கை உரிமைகளை பறிப்பதன் மூலம் அரசியலைப்பு அதிகார சமநிலையை அது சேதப்படுகிறது. மேலும், நீட் தேர்வால், மாநில அரசின் மருத்துவ கல்வி நிறுவனத்தில் சேர்க்கை முறையை முடிவு  செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில  அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த கடிதத்தின் நகலை திமுக மூத்த எம்பி.க்கள் உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து வழங்கி வருகின்றனர். சமீபத்தில், கேரளா சட்டீஸ்கர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரை சந்தித்து தமிழக முதல்வரின் கடிதம், தீர்மானத்தின் நகல் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா நேற்று டெல்லியில் சந்தித்து, இந்த தீர்மானம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் நகலை வழங்கினார்.

Tags : Trichy Siva ,Chief Minister ,MK Stalin ,Chief Minister of ,Jharkhand , Trichy Siva presented the letter of Chief Minister MK Stalin to the Chief Minister of Jharkhand
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...