புதிய சமூக ஊடக நிறுவனம் தொடங்குகிறார் டிரம்ப்

நியூயார்க்: புதிய சமூக ஊடக நிறுவனத்தை முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்க இருக்கிறார். அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, வன்முறையை தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டதாக, டிவிட்டர், பேஸ்புக் போன்றவை டிரம்ப்பின் கணக்கை முடக்கின. இதனால் நேற்று அவர் புதிய சமூக ஊடகத்தை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, ‘டிரம்ப் மீடியா மற்றும் தொழில்நுட்ப குழுமம்’ என்ற நிறுவனத்தையும், ‘உண்மை சமூகம்’ என்ற சமூக  ஊடக செயலியையும் அவர் தொடங்க உள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘தலிபான்கள் அதிகமாக உள்ள டிவிட்டர் உலகில் நாம் வாழுகிறோம். இதனால் தலிபான்களே...  நீங்கள் விரும்பும் அமெரிக்க அதிபர் மவுனமாகி விட்டார். என கூறியுள்ளார்.

Related Stories:

More
>