×

பதவி உயர்வில் மதிப்பெண், பணிமூப்பு தமிழக அரசே முடிவு எடுத்து செயல்படுத்தும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் அரசு பணி நியமனங்களில் 69 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் போட்டித் தேர்வின் அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்படும் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து, தமிழக அரசின் இந்த நடைமுறையை எதிர்த்து தொடரபட்ட வழக்கில், சுழற்சி முறையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்ப்பு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து கடந்த 1ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பற்றி விளக்கம் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”டிஎன்பிஎஸ்சி உட்பட தமிழகத்தில் அரசுப் பணி வழங்குவதில் மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், மாநில அரசு 1998ம் ஆண்டு வரையில் உள்ளவர்களுக்கு தான் இந்த உத்தரவை பின்பற்றி பதவி உயர்வு வழங்கி வருகிறது. அதனால், இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவை நடப்பாண்டு வரை செயல்படுத்த வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘பதவி உயர்வு வழங்கும் விவகாரத்தில் முன்னதாக கொடுக்கப்பட்ட உத்தரவை மாநில பரிசீலனை செய்து செயல்படுத்தி வருகிறது. அதனால், இது குறித்து மாநில அரசே ஆலோசித்து முடிவு எடுக்கும். இருப்பினும், மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதோடு இணைத்து இந்த விளக்க மனுவும் விசாரிக்கப்படும்,’ என உத்தரவிட்டார்.

Tags : Government of Tamil Nadu ,Supreme Court , Promotion score, seniority will be decided and implemented by the Government of Tamil Nadu: Supreme Court order
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...