தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஐ.ஜி.கீதாவின் பதவிக்காலம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு.!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக  நியமிக்கப்பட்ட ஐ.ஜி.கீதாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.கீதாவின்பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி. கீதாவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்த 3 மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனிடையே, புதிதாக தேர்தல் நடத்த சங்கத்தில் பணமில்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி தர வேண்டும் என்றும் சங்க தேர்தலுக்காக ஏற்கனவே ரூ.35 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் நடிகர் சங்கம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது.

Related Stories: