ஐரோப்பிய ஓபன் டென்னிஸ்: சின்னர், ப்ரூக்ஸ்பை காலிறுதிக்கு தகுதி

ஆன்ட்வெர்ப்: ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் காலிறுதி போட்டிக்கு இத்தாலியின் ஜான்னிக் சின்னர், அமெரிக்காவின் லோரென்சோ ப்ரூக்ஸ்பை உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் நகரில் ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் ஜான்னிக் சின்னர், சக வீரரான லோரென்சோ முசெட்டியுடன் மோதினார். முதல் செட்டில் மட்டும் முசெட்டி சற்றுப் போராடினார். இருப்பினும் அந்த செட்டை 7-5 என கைப்பற்றிய சின்னர், அடுத்த செட்டை எளிதாக 6-2 என கைப்பற்றி, முசெட்டியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் ஜென்சன் ப்ரூக்ஸ்பையும், நெதர்லாந்தின் வான் டி சாண்ட்ஸ்கல்ப்பும் மோதினர். இதில் 6-2, 6-0 என நேர் செட்களில் சாண்ட்ஸ்கல்ப்பை எளிதாக வீழ்த்தி, ப்ரூக்ஸ்பை காலிறுதிக்கு முன்னேறினார். பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்க்நெக், ஸ்பெயினின் இளம் வீரர் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினா ஆகியோரும் நேற்று நடந்த 3ம் சுற்றுப் போட்டிகளில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

Related Stories:

More