புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐபிஎல் அணியை வாங்க மேன்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் விருப்பம்.! எதிர்பார்ப்பை கூட்டும் ஐபிஎல்2022

டெல்லி: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐபிஎல் அணியை வாங்க மேன்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளது. உலகளாவிய கால்பந்து கிளப்களில் ஒன்றான மேன்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம்,  ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் டெண்டர் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரபலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் தற்போது சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப், ஐதராபாத், டெல்லி ஆகிய 8 அணிகள் உள்ளன.

இந்த நிலையில் அடுத்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகளை சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதற்கான டெஸ்டரும் ஏற்கனவே விடப்பட்டியிருந்தது. இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உலகளாவிய புட்பால் கிளப்புகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம் தெரிவித்ததால் ஐபிஎல் அணிக்கான டெண்டர் தேதி நீட்டிக்கப்பட்டது.

அக்.5 வரை இருந்த டெண்டர் தேதி 10 வரை நீட்டிப்பு செய்ததற்கு மான்செஸ்டர் நிர்வாகமே காரணம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் கிரிக்கெட் அணியை வாங்கும்பட்சத்தில் ஐபிஎல் புகழ் இன்னும் பெரியளவில் இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதனிடையே ஐரோப்பாவில் பிரபலமாக உள்ள கால்பந்து அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யுனிடெட் என்பதாகும். உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More