×

விருதுநகரில் கோயில் தேர் நிறுத்த பழமையான மரங்களை அகற்றும் பணி துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மேற்கு ரதவீதியில் 800 ஆண்டுகள் பழமையான சொக்கநாதர் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலில் இருந்த சட்டத்தேர் பழுதடைந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.பல லட்சம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டு, வெள்ளோட்டம் விடப்பட்டது. தேரை நிறுத்துவதற்கு கோயிலின் முன்பகுதியில் ஆலமரம் உள்பட 4 மரங்களை வெட்ட முடிவெடுக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன் வெட்டும் பணி துவங்கியது. அப்பகுதி மக்கள் தேர் நிறுத்த இடங்கள் நிறை உள்ள நிலையில் பழமையான மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் வெட்டும் பணி கைவிடப்பட்டது. வனத்துறை அனுமதி பெற்று நேற்று மரங்களை வெட்டும் பணி போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது.

இந்நிலையில் அப்பகுதி பெண்கள் பழமை வாய்ந்த மரங்களை வெட்டி பாழாக்காமல் வேறு இடங்களில் நடுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென தெரிவித்தனர். அதை தொடர்ந்து மரங்களை தூரோடு எடுத்து கோயில் வளாகத்திற்குள் நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் அலுவலர் தெரிவித்தனர்.

Tags : Virudhunagar , Virudhunagar, Temple Chariot
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...