ஆத்தூர் சீவல்சரகுவில் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி ஜரூர்

சின்னாளபட்டி: ஆத்தூர் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களுக்கு மழைநீர் வரும் நீர்வரத்து கால்வாய்கள் உள்ளன. தற்போது 100 நாள் வேலை திட்டம் மூலம் இந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றன. புதுக்கோட்டை அருகே பொம்மனம்பட்டி சின்னகுளத்திற்கு வரும் நீர்வரத்து பாதைகளை 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் தூர்வாரி வருகின்றனர்.

வாய்கால்களில் அடர்ந்து வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றியதுடன், பாதையில் மழைநீர் தேங்கும் அளவிற்கு குழிகளை ஏற்படுத்தினர். இதன்மூலம் மழைநீர் தேங்கி நிலத்தடி நீர் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜேந்திரன், ஊராட்சி செயலர் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்ததுடன், பணிகளை துரிதப்படுத்தினர்.

Related Stories: