ஊட்டி - கூடலூர் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேட்டுப்பாளயைம் முதல் கூடலூர் வரையில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலும் சாலைகளை விரிவாக்கம் செய்தல், மோரிகள் அமைத்தல், சிறிய மற்றும் பெரிய பாலங்கள் கட்டுதல் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் தடுப்பு சுவர்கள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் இருந்த திட்டகள் கரைக்கப்பட்டு சாலைகள் விரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதிகளில் மழை நீர் வடிகால்கள் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முதல் ஹில்பங்க் வரை சாலையோரங்களில் இருந்த மண் திட்டுக்கள் கரைக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் தற்போது கான்கிரீட் கலவை மூலம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கலெக்டர் அலுவலகம் உள்ள சாலையில் தற்போது தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், தலைகுந்தா, எச்பிஎப்., போன்ற பகுதிகளிலும் சாலையோரங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகள்

மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories:

More
>