இந்தியாவில் தலைசிறந்த செல்வாக்கு பெற்ற முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதலிடம்

டெல்லி : இந்தியாவில் தலைசிறந்த செல்வாக்கு பெற்ற ஐந்து முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதலிடம் பெற்றுள்ளார். இந்தியா முதலமைச்சர்களின் செல்வாக்கு குறித்து “சி.என்.ஓ.எஸ் ஒபினியோம்’’ என்ற அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது. அந்த அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி கணக்கெடுப்பில் 67 நிகர புள்ளிகள் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராக திகழ்கிறார்.  

தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 79 சதவிகிதம் பேர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சி  திருப்தி அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்12 சதவிகிதம் பேர் மட்டுமே அவருடைய செயல்பாடு திருப்தி இல்லை என்று கூறியுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மக்கள் செல்வாக்கு பெற்ற சிறந்த முதலமைச்சர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.அடுத்ததாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூன்றாவது இடமும்,  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 4வது இடமும், அசாம் முதலமைச்சர் ஹேமந்த் 5வது இடமும் பிடித்துள்ளனர்.

Related Stories:

More
>