×

திம்பம் மலைப்பகுதியில் திடீர் கனமழையால் புதிதாக தோன்றிய அருவியில் கொட்டும் தண்ணீர்: செல்பி எடுத்து மகிழ்ந்த வாகன ஓட்டிகள்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை வழியாக தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில், திம்பம் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  மதியம் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வனப்பகுதியில் கனமழை பெய்ததால் 27 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மலைப்பாதையோர வனப்பகுதியில் திடீரென தோன்றிய புதிய நீர்வீழ்ச்சியில் செந்நிற மழைநீர் கொட்டியது. புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சியில் செந்நிற மழைநீர் கொட்டியதை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு அருகே சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திம்பம் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கனமழை பெய்ததால் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

Tags : Timbham , Thimphu Hills, heavy rain, waterfall
× RELATED திம்பம் மலையில் லாரி பழுது: தமிழகம்-...