×

ஐப்பசி பௌர்ணமி தினம்: கன்னியாகுமரியில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி: முன்னாள் அமைச்சர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடந்தது. நூற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தையொட்டி குமரி மாவட்ட இந்து திருத் தொண்டர் பேரவை சார்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. முன்னதாக மாலை 5 மணிக்கு முக்கடல் சங்கமம் கடற்கரையில் அமைந்துள்ள பரசுராமர் விநாயகர் கோயில் முன்பு பக்தர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் பரசுராமர் விநாயகர் கோயிலில் அடியார்கள் வேண்டுதல் நிகழ்ச்சி நடை பெற்றது. பூஜை முடிந்தபிறகு அணையா தீபம் ஏற்றப்பட்டு கயிலை வாத்தியம் இசைக்கப்பட்டது. பின்பு அடியார்களுக்கு எதிர்சேவை நடந்தது. அதனை தொடர்ந்து சுமங்கலிகள் நெய் தீபம் ஏற்றினர். உமாமகேஸ்வரசிவாச்சாரியார் சங்கல்ப பூஜை செய்தார்.  இரவு 7 மணிக்கு சமுத்திர அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம், நிவேத்தியம் நடந்தது.  நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், பச்சைமால், ராஜேந்திர பாலாஜி  உட்பட  நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தா தலைமை வகித்து முக்கடல் சங்கம மகா சமுத்திர தீர்த்த ஆரத்தியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் ராஜகோபால், பொதுச்செயலாளர் டாக்டர் சிவசுப்பிரமணியபிள்ளை, பொருளாளர் காமராஜ், ஒருங்கிணைப்பாளர் கனகராஜ்,குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் சுபாஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தலைவர் சுயம்பு, தம்பித்தங்கம், சங்கம் ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Ibizi Pauernami Day ,Arathi ,Oceans ,Kanyakumari , Ippasi Pournami, Kanyakumari, Devotees
× RELATED கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு