×

பழவேற்காடு ஏரியில் மூழ்கி மீனவர் பலி

பொன்னேரி: பழவேற்காடு ஏரியில் வலைகட்டும்போது மீனவர் சேற்றில் சிக்கி இறந்தார். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி உள்ளது. இங்கு காட்டுப்பள்ளி முதல் ஆந்திரமாநிலம் ஹரிகோட்டா வரை ஏரியை ஒட்டியுள்ள மீனவ கிராம மக்கள் மீன்பிடித்து பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் கோட்டைக்குப்பம் ஊராட்சியில் உள்ள ஆண்டிக்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த ரமணா (45) என்ற மீனவர் நேற்று முன்தினம் இரவு பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

மீன்பிடி வலையை பழவேற்காடு ஏரியில் உள்ள சேற்றுப் பகுதியில் நட்டார். அப்போது சேற்றில் சிக்கி மாயமாகியுள்ளார். அவருடன் சென்றவர்கள் தேடிய நிலையில் திருப்பாவை வண்ணம் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். பின்பு நேற்று காலையில் ஏரியில் ஒதுங்கிய அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து திருப்பாலைவணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Fruit Forest Lake , Fisherman drowns in Fruit Forest Lake
× RELATED பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை...