கொசவன்பாளையம் ஊராட்சி: திமுக தலைவர் பதவியேற்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற  தலைவருக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ச.அண்ணாகுமார் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவராக ச.அண்ணாகுமார் பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மா.ராஜி, ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் என்.பி.மாரிமுத்து, ஒன்றிய நிர்வாகிகள் பா.கந்தன், கு.ச.கதிரவன், கட்டதொட்டி எம்.குணசேகரன், ஜி.சி.சி.கருணாநிதி, ஜி.பி.பரணிதரன், லல்லிபாபு மற்றும் வார்டு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெள்ளைவாயல் மற்றும் ஆலாடு ஊராட்சி மன்ற தலைவர்களாக பொறுப்பேற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். திருவெள்ளைவாயல் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்ற முத்து, ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடந்த விழாவில் தலைவராக பொறுப்பேற்றார். இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை துவங்கினார். அதேபோன்று ஆலாடு ஊராட்சியில் ஊராட்சி  தலைவராக பொறுப்பேற்ற பிரசாத், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணபிரியா, வினோத் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்றார்.

Related Stories:

More