விமானப்படை பெண் அதிகாரி பலாத்கார வழக்கில் இன்று விசாரணை

கோவை: கோவை விமானப்படை பயிற்சி கல்லூரியில் டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரி, தன்னை விமானப்படை அதிகாரி அமித்தேஸ் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் கூறினார். இது தொடர்பாக கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அமித்தேஸை கைது செய்தனர்.ஆனால் இந்த வழக்கை விமான படையினரே விசாரிக்கலாம் என்று கோவை நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் மகளிர் போலீசார் இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனு கோவை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories:

More