போலி ஆவணத்தில் சிம்கார்டு பெற்று முறைகேடு: ஈரோடு நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆஜர்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, கடத்தூர், கோபி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து, செல்போன் சிம் கார்டுகளை பெற்று முறைகேடு செய்ததாக  மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரூபேஷ் பிரவீன் என்பவரை கேரள போலீசார் கைது செய்து திருச்சூர் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணைக்காக நேற்று மாவோயிஸ்ட் ரூபேஷ் பிரவீனை துப்பாக்கி ஏந்திய கேரள போலீசார் ஈரோடு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். நீதிபதி முருகேஷன் வழக்கை விசாரித்து ரூபேஷ் பிரவீனை நவம்பர் 2ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மாவோயிஸ்ட் ரூபேஷ் பிரவீன் போலீஸ் பாதுகாப்புடன் கேரளா அழைத்து செல்லப்பட்டார்.

Related Stories: