×

பொறியியல் தேர்வு வெயிட்டேஜ் முறையை ஒழுங்குபடுத்த அண்ணா பல்கலை முடிவு

சென்னை:அண்ணாபல்கலைக் கழகம் மற்றும்  இணைப்பு பெற்ற கல்லூரிகள், தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளின் தேர்வுகளில் வழங்கப்படும் வெயிட்டேஜ் முறையை 60: 40 என்ற முறையில் ஒழுங்குபடுத்த அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள துறைகள் மூலம் நடத்தப்படும் தேர்வுகள், இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகள் நடத்தும் தேர்வுகள், தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகள் நடத்தும் தேர்வுகளில் செமஸ்டர் தேர்வுகள், துறை அளவிலான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவை எழுத்து தேர்வு என்றும், அகமதிப்பீட்டு தேர்வுகள் என்றும் நடத்தப்பட்டு பொதுவாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

அதை எழுத்து தேர்வுக்கு 60 அகமதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்கள் என்றும் பல்கலைக் கழகம் மாற்றுகிறது. இந்த எழுத்து மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்களே அவர்கள் பாடங்களில் பெற்ற  இறுதி மதிப்பெண்ணாகும். இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பருவத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டு தேர்வுகளுக்கு 80 சதவீதம் மற்றும் 20 சதவீதம் என வெயிட்டேஜ் வழங்குகிறது. தன்னாட்சி பெற்ற பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக துறைத் தேர்வுகளில் முறையே 60%:40% , 50%:50% என்ற முறையை பின்பற்றுகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் நடந்த அண்ணா பல்கலைக் கழக அகடமிக் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அனைத்து பொறியியல் எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கு 60%:40% என வழங்க  முடிவு செய்துள்ளது. எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வு தாள்களுக்கான(புறமதிப்பீடு மற்றும் அகமதிப்பீட்டு தேர்வுகள்) கூறுகள் 50%:50% என இருக்கும். இந்நிலையில், தேர்ச்சி வீதம் குறைவாக இருக்கின்ற இணைப்பு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளின் கூட்டமைப்பு, தமிழக கலை அறிவியல் கல்லூரிகளின் சங்கங்கள் ஆகியவை சார்பில், அனைத்து கல்லூரிகளிலும் நடத்தப்படும் அக மற்றும் புற மதிப்பீட்டு தேர்வுகளுக்கான வெயிட்டேஜ் முறையை ஒரே சீராக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகம் இது  குறித்து பரிசீலித்து அனைத்து கல்லூரிகளுக்குமான வெயிட்டேஜ் முறையை ஒழுங்கு படுத்துவதற்கான முறையை இறுதி செய்துள்ளது.  இந்த வெயிட்டேஜ்  முறையை கொண்டு வந்தால் அது தனியார் கல்லூரிகளில் சேர்க்கையை அதிகரிக்க உதவும் என்று அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகமோ, கல்லூரிகளின் தொடர் மதிப்பீட்டுகளை மேம்படுத்தவும், பருவத் தேர்வுகளின் தரத்தை மேம்படுத்தவும் விரும்புகிறது. இருப்பினும், இதுபோன்ற வெயிட்டேஜ் முறையால் மட்டும் தரத்தை உயர்த்திவிட முடியாது என்று தன்னாட்சி பெற்ற கல்லூரிகளின்  முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, 2021-2022ம் கல்வி ஆண்டில் 400 இணைப்பு பெற்ற கல்லூரிகளில் புதிய ஒழுங்குமுறைகளையும், விதிகளையும் நடைமுறைப்படுத்தவும் அண்ணா பல்கலைக் கழக அகடமிக் கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுன்படி, அண்ணா பல்கலைக் கழகம் பிஇ, பிடெக் படிப்புகளுக்கு கொண்டு வரும் ஒழுங்குமுறைகளின் பயனாக, அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகம் இளநிலை பட்டப் படிப்புகளுக்காக கொண்டு வந்துள்ள மாதிரி பாடத்திட்டங்களில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒழுங்குமுறைகளின் பயனாக,  அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகம் இளநிலை பட்டப் படிப்புகளுக்காக கொண்டு வந்துள்ள மாதிரி பாடத்திட்டங்களில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Anna University , Anna University decides to regulate engineering exam weightage system
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...