பாடகி சித்ராவுக்கு கோல்டன் விசா

துபாய்: சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களை கவுரவிக்கும் வகையில், 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை 2019ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக அரசு தொடங்கியது. மலையாள நடிகர் மம்முட்டி, நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பின்னணி பாடகி சித்ரா ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றுள்ளார். அவருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு உயரதிகாரி விசாவை வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரும் இந்தப் பத்து வருட விசாவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: