நமீபியா சாதனை வெற்றி

அபுதாபி: நெதர்லாந்து அணியுடனான உலக கோப்பை டி20 தகுதிச் சுற்று ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், நமீபியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. அபுதாபியில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்துவீச, நெதர்லாந்து 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. தொடக்க வீரர் பேட்ரிக் மேக்ஸ்வெல் 70 ரன், கோலி ஏக்கர்மேன் 35 ரன், ஸ்காட் எட்வர்ட்ஸ் 21* விளாசினர்.

அடுத்து களமிறங்கிய நமீபியா 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து வென்றது. டேவிட் வைஸ் 66*, கேப்டன் எராஸ்மஸ் 32 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினர். உலக கோப்பையில் நமீபியா பெற்ற முதல் வெற்றி இது என்பதுடன், டி20ல் அந்த அணியின் சிறந்த சேசிங்காகவும் இந்த வெற்றி அமைந்தது.

Related Stories: