அபய் சர்மா விண்ணப்பம்

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.  இந்நிலையில்  இந்திய யு-19  அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக இருந்த அபய் சர்மா (53)  பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் இந்திய மகளிர் அணிக்கும் பீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க நவ.3 கடைசிநாள். இப்போது இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.தர் உள்ளார்.

Related Stories:

More