×

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் சர்வதேச பயணிகளுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு: வருகிற 25ம் தேதி முதல் அமல்

புதுடெல்லி: உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசியை முழுவதுமாக போட்டுக்கொண்டுள்ள சர்வதேச பயணிகள் இந்தியாவுக்கு வந்தால் தனிமைப்படுத்துதல் இல்லை என்று அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதோடு, கொரோனா தடுப்பூசி  செலுத்துவது அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வருகின்ற 25ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. கொரோனா தடுப்பூசியை முழுவதுமாக செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் இந்தியா பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகளில் இருந்து  உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற்ற கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு இந்தியாவிற்கு வரும் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனை கிடையாது.

ஆனால் அவர்கள் கொரோனா இல்லை என்ற  ஆர்டி-பிசிஆர் சான்றிதழை சமர்பிப்பது அவசியமாகும்.  ஒரு டோஸ் தடுப்பூசி அல்லது கொரோனா தடுப்பூசி போடாத பயணிகள் வருகைக்கு பிந்தைய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன் பின் அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்துதல், இந்தியாவிற்கு வந்த எட்டாவது நாள் மீண்டும் பரிசோதனை, பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தால் அடுத்த 7 நாட்களுக்கு அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்ததெந்த நாடுகள்
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பெலாரஸ், லெபனான், ஆர்மீனியா, உக்ரைன், பெல்ஜியம், ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய 11 நாடுகளுடன் தேசிய அல்லது உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கொரோனா தடுப்பூசிகளை பரஸ்பர அங்கீகாரம் பெறுவதற்கான ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

Tags : India , India's new regulation for international travelers to be vaccinated: Effective 25th
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...