லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் நான்கு பேரிடம் மட்டுமே விசாரணை நடத்தியது ஏன்?.. உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் நான்கு பேரிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டு இருப்பது ஏன்? என உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வியெழுப்பி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் அக்.3ம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது பாஜ ஒன்றிய அமைச்சர் அஜய்மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் தாறுமாறாக ஏறியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இச்சம்பவத்தில் வழக்கு பதிவு செய்தது.  சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் உ.பி அரசு தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி இல்லை என்று தெரிவித்திருந்தது. மேலும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என சரமாரி கேள்வியெழுப்பி இருந்தது. இந்நிலையில் ஆசிஸ் மிஸ்ராவை உத்தரப்பிரதேச போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். இதற்கிடையில் இவ்வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஹேமா கோலி ஆகியோர் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது உத்தரப்பிரதேச மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வ், ‘‘லக்கிம்பூர் விவகாரத்தில் தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த விவகாரத்தில் மாநில அரசின் பதிலை நேற்று இரவு ஒரு மணி வரையில் எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது திடீரென விசாரணையின் போது அறிக்கையை கொடுக்கிறீர்கள், எதுவாக இருந்தாலும் விசாரணைக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும்.

இப்போது எங்களுக்கு இது தேவையில்லை’ என கோபமாக தெரிவித்தார். இதையடுத்து அதற்கு பதிலளித்த மாநில வழக்கறிஞர்,‘ இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களிடம் இருந்து சம்பவம் தொடர்பான அனைத்து செல்போன்கள், வீடியோக்கள் மீட்கப்பட்டுள்ளது’என தெரிவித்தார்.

அப்போது குறுகிட்ட தலைமை நீதிபதி,‘‘உங்களது அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது வரையில் அதில் நான்கு பேரிடம் மட்டுமே காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர். மற்றவர்களையும் காவல்துறை சார்பாக எடுத்து விசாரிக்க ஏன் மாநில அரசு கேட்கவில்லை?. என சரமாரி கேள்வியெழுப்பினார். இதையடுத்து ‘ மாநில அரசு சார்பில் ஒரு வார கால அவகாசம் கேட்கப்பட்டது. கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது வரையில் அதில் நான்கு பேரிடம் மட்டுமே காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர். மற்றவர்களையும் காவல்துறை சார்பாக எடுத்து விசாரிக்க ஏன் மாநில அரசு கேட்கவில்லை?

Related Stories:

More
>