×

வியாழன் கிரகத்தில் திடீர் ஒளி: விஞ்ஞானிகள் ஆய்வு

துபாய்: ஜீபிடர் எனப்படும் வியாழன் வாயுகிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த கோளில் புவி ஈர்ப்பு விசை அதிகம். வியாழனை பூமியின் பாதுகாவலன் என்று சில விஞ்ஞானிகள் அழைப்பர்  ஏனெனில் பூமியை நோக்கி வரக்கூடிய பெரும்பாலான‌  விண்கற்களை  வியாழன் அதன் ஈர்ப்பு விசையால் ஈர்த்துகொள்கிறது. இந்நிலையில்  ஜப்பானிய வானியலாளர்கள் வியாழன் கிரகத்தில் பிரகாசமான ஒளியை கண்டனர். கியோட்டோ பல்கலைக்கழகத்தின் கோ அரிமேட்ஸு தலைமையிலான ஒரு குழு ஆய்வு மேற்கொண்டிருந்த போது வியாழன் கோளில் அக்டோபர் 15 அன்று சுமார் நான்கு விநாடிகள் பிரகாசமான ஒளி தோன்றும் காட்சிகளை கண்டனர்.

அதனை பதிவு செய்து வெளியிட்டனர். ஏதோ மர்ம பொருள் மோதி  வெளிச்சம் ஏற்பட்டது போன்று இருந்தது. பிரெஞ்சு வானியல் சங்கத்தின் மார்க் டெல்க்ரோயிக்ஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இத்தகவலை உறுதிபடுத்தினர்.

Tags : Jupiter , Sudden light on Jupiter: Scientists study
× RELATED வரதட்சணையின்றி திருமணம் அமையும் சண்டாள யோகம்