அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு மன்னிப்பு கேள்; 50 கோடி கொடு!: ஷெர்லினுக்கு ஷில்பா நோட்டீஸ்

மும்பை: பணம் பறிப்பதற்கான மறைமுக நோக்கத்துடன் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக ஷெர்லின் அவதூறு பரப்பி வருவதாக கூறி, ரூ. 50 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆபாசப் படங்களை தயாரித்து அதனை செல்போன் ஆப்ஸ் மூலம் பதிவேற்றிய புகாரில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். இவர் மீது நடிகை ஷெர்லின் சோப்ரா, கடந்த சில மாதங்களுக்கு முன் பாலியல் பலாத்கார புகார் கூறியிருந்தார். அதையடுத்து ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், ராஜ் குந்த்ராவின் தொடர் மிரட்டலால் ஷெர்லின் சோப்ரா தனது வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

நிலைமை இவ்வாறு இருக்க கடந்த சில நாட்களுக்கு முன் ஜுஹு காவல் நிலையத்தில், ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் ஷெர்லின் சோப்ரா கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் ஷெர்லின் சோப்ராவுக்கு  எதிராக ரூ.50 கோடி கேட்டு வழக்கறிஞர் மூலம் மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், ‘பணம் பறிப்பதற்கான மறைமுக நோக்கத்துடன் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது அவதூறு பரப்பி வருகின்றீர்கள். எனவே பத்திரிகைகள் மற்றும் ‘டிஜிட்டல் மீடியா’ வாயிலாக ஏழு நாட்களுக்குள் பொது மன்னிப்பு கோருவதுடன், ரூ.50 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: