டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

ஒடென்ஸ்:  டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். அதே போல் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை எதிர்த்து துருக்கியை சேர்ந்த  நெஸ்லிஹான் ஜித் மோதினார். இதில் 21-12, 21-10 என்ற புள்ளி கணக்கில், அவரை சிந்து வீழ்த்தினார்.

இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ஜோடியை எதிர்த்து, இங்கிலாந்தின் கேல்லம் ஹெம்மிங் மற்றும் ஸ்டீவன் ஸ்டால்வுட் ஜோடி மோதியது. இதில் இந்திய ஜோடி 23-21, 21-15 என்ற செட் கணக்கில், இங்கிலாந்து ஜோடியை வீழ்த்தி, அடுத்து சுற்றுக்கு முன்னேறியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் காந்த் கிதம்பியை எதிர்த்து, சக வீரர் சாய் பிரனீத் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-11 என 2 செட்களில் வெற்றி பெற்றார்.

Related Stories: