ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூரில் குறுகலான சாலையால் அடிக்கடி விபத்து

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் செல்லும் சாலையை 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் விவசாய பணிக்கும், பால் உற்பத்திக்கும், கட்டிட பணிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும், பள்ளி- கல்லூரி செல்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சில நேரங்களில் உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது.

எனவே சாலையை விரிவாக்கம் செய்யுமாறு இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் குறிப்பிட்ட தூரம் வரை சாலையை விரிவாக்கம் செய்து விட்டு நிறுத்தி வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை விரிவாக்க பணிகளை முழுமையாக மேற்கொள்ள உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>