பஞ்சாப்பில் புதிய கட்சி அமரீந்தர் சிங் அறிவிப்பு: பாஜ.வுடன் கூட்டணி அமைக்கிறார்

புதுடெல்லி: பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனால், அவர் பாஜ.வில் இணைய போவதாகவும் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் புதிய கட்சி தொடங்க இருப்பதாக நேற்று இரவு அறிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், `` புதிய கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பட்சத்தில், அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: