யார் சொன்னாலும் கவலையில்ல... வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாய்ந்தது

சியோல்: வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. அமெரிக்கா, ஐநா.வின் பொருளாதார தடைகளை மீறி, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, சூப்பர்சோனிக் ஏவுகணை, ரயிலில் வீசக்கூடிய ஏவுகணை போன்றவற்றை கடந்த மாதம் தொடர்ச்சியாக 5 முறைக்கு மேல் வீசி சோதனை செய்தது.  

இந்நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி  சோதனை செய்தது. ஜப்பான் கடலின் மீது இது வீசப்பட்டது. இது பற்றி தென்கொரிய கூட்டுப்படை தலைமை அதிகாரிகள் கூறுகையில், ‘வடகொரியாவின் கிழக்கு கடற்கரை துறைமுகமான சின்போவில் இருந்து ஏவுகணை வீசப்பட்டது. இது, வடகொரியாவின் நீர்மூழ்கி கப்பல் தளமாகும். இந்த ஏவுகணை ஜப்பான் கடற்பகுதியில் தரையிறங்கியது. எனவே, இது நீர்மூழ்கி கப்பலில் இருந்து வீசப்பட்டு இருக்கலாம்,’ என தெரிவித்தனர்.

Related Stories: