ஜெயக்குமார் எம்பியின் டிவிட்டர் கணக்கு ஹேக்

சென்னை: திருவள்ளூர் தொகுதி எம்பி ஜெயக்குமாரின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் தொகுதி எம்பியாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் கே.ஜெயக்குமார். இவர் தமிழக காங்கிரஸ் செயல் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவரது டிவிட்டர் கணக்கு நேற்று முன்தினம் ஹேக் செய்யப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதால் இதுகுறித்து அந்நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்படும். டிவிட்டர் கணக்கு ஹேக் செய்து பெயர் மாற்றப்பட்டு இருப்பதால் தவறான தகவல் பதிவிட வாய்ப்பு உள்ளது. எனவே, அதில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று குறுஞ்செய்தி மூலம் எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

More
>