×

மநீம கோரிக்கை ஆசிரியர் நியமன வயது வரம்பில் பழைய நிலை தொடர வேண்டும்

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழக பள்ளிக்கல்வி துறையில் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர் நியமன உச்ச வயதுவரம்பு 57ஆக இருந்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், கொரோனா தொற்றை தொடர்ந்து, ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 60ஆக உயர்த்தப்பட்டது. அப்போது நியமன வயது வரம்பை 59ஆக உயர்த்தி இருக்க வேண்டும். மாறாக, பொதுப்பிரிவினருக்கு 40 வயது என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45 என்றும் குறைத்துவிட்டனர். இதை எதிர்த்து பட்டதாரிகள் போராடிய நிலையில், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ‘ஆசிரியர்களுக்கான வயதுவரம்பை குறைத்து, கேடுகெட்ட மனநிலையை வெளிப்படுத்தி உள்ளது எடப்பாடி அரசு’ என்று கடுமையாக விமர்சித்தார்.  இந்த விவகாரத்தில் திமுக அரசானது, எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்தியதை போலவே உச்ச வயதுவரம்பை 57 அல்லது 59 ஆக்குவதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று  மநீம கேட்டுக்கொள்கிறது.

Tags : Manima , Manima Demand The teacher should continue the old status quo in the appointment age range
× RELATED சொல்லிட்டாங்க…